ஈரோடு அந்தியூரை ஆடிப்போக வைத்த தம்பதி.. மயங்கிய தனியார் நிறுவன அதிகாரி.. எழுந்தவருக்கு ட்விஸ்ட்

 


ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த கணவன் மனைவி இரண்டு பேர், தாங்கள் சித்த மருத்துவர் என்று கூறியதுடன், குழந்தைப் பேறுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி தனியார் நிறுவன அதிகாரியை மாத்திரை கொடுத்து மயக்கி ரூ.25 ஆயிரம் பறித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சித்த மருத்துவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


HTML tutorial

இன்றைக்கு மருத்துவ துறையில் குழந்தை பேறு மிகப்பெரிய பிசினஸ் ஆக வளர்ந்துள்ளது. பல கருத்தரித்தல் மையங்கள் வளர்ந்துள்ளன. ஒவ்வொரு நகரிலும் கருத்தரித்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக குழந்தையின்மைக்கான காரணம் ஆண் மற்றும் பெண் இருவரிடமும் இருக்கும் என்பதால் இருவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.


 சிகிச்சை அளிப்பதாக மோசடி ஆண்களை பொறுத்தவரை விந்தணுப் பரிசோதனை செய்யப்படும். பெண்களை பொறுத்தவரை ஹார்மோன் பரிசோதனை, கருப்பை ஸ்கேன், ஹிஸ்டரோசல்பிங்கோகிராஃபி போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இது ஒருபுறம் எனில், சித்த மருத்துவத்தையும் மக்கள் நாடுகிறார்கள். அங்கும் சிறப்பான முறையில் வைத்தியங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் சில ஆங்கில மற்றும் சித்த மருத்துவர்கள், மோசடி செய்வதும் நடக்கிறது. ஈரோட்டில் சித்த மருத்துவர்கள் இரண்டு பேர் மீது புகார் எழுந்துள்ளது.


 ஈரோட்டில் அறிமுகம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையம் பகுதியைச் சேர்ந்த 42 வயதாகும் சுரேஷ் என்பவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த நவம்பர் 16-ந் தேதி ஒரு ஆணும், பெண்ணும் வந்துள்ளனர். அவர்கள் தங்களை சுரேசிடம் சித்த மருத்துவர்கள் என அறிமுகம் செய்துள்ளனர்., குழந்தைப்பேறு இல்லாதவர்களை பரிசோதனை செய்து மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதற்காக வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.


 8 வருடமாக குழந்தை இல்லை இதை கேட்ட தனியார் நிறுவன அதிகாரி சுரேஷ் தனக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்று ஆதங்கத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரை 2 பேரும் பரிசோதனை செய்து உயிரணுக்கள் குறைவாக இருப்பதாகவும், தாங்கள் கொடுக்கும் மருந்தை உட்கொண்டு வந்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்று நம்பிக்கையாக பேசியுள்ளனர்.


 மாத்திரை சாப்பிட்டார் மேலும் அவர்கள் கொடுத்த ஒரு மாத்திரையை சுரேஷ் வாங்கி விழுங்கியுள்ளார். இதில் சிறிது நேரத்தில் சுரேஷ் அவர் மயக்கமடைந்தார். சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு அவர் கண் விழித்து பார்த்தபோது 2 பேரையும் காணவில்லை. சுரேசிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் அபேஸ் செய்யப்பட்டிருந்தது கூறப்படுகிறது. தம்பதி கைது இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் அவர்கள் வந்த காரின் எண்ணையும், செல்போன் எண்ணையும் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வத்துரை (வயது 33), அவருடைய மனைவி பிரியங்கா என்கிற இளவரசி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர்.